Thiruvannamalai Girivalam Special

thiruvannamalai girivalam

திருவண்ணாமலை கிரிவலம் (Thiruvannamalai Girivalam )

சிவபெருமானுடைய திருத்தலம் என்று சொன்னதும் முதலில் நம் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை, இந்த மலையில் இன்னும் இன்னும் ஏராளமான ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்துள்ளதாக இருக்கிறது, இங்கு கிடைக்கும் பல அனுபவங்களும் பக்தர்கள் பலருக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. பலரின் கண்களுக்கு தெரியாத வகையில் அருவமாகவும் பிறரின் கண்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் சித்தர்களும் இங்கு நடமாடுவதால் சொல்லப்படுகிறது,

 

தரிசனம் செய்வது எப்படி?

திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படி? (Thiruvannamalai Girivalam). சிறப்பானதோர் அதே அளவு சிறப்பானது அண்ணாமலையை வலம் வந்து வணங்குவது உலகில் இருக்கும் பழமையான மலைகள் திருவண்ணாமலைக்கும் ஒன்று என்ற கருத்து இப்பொழுதும் உண்டு, இதன் வயது 260 கோடி வருடங்கள் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் 2671 மீட்டர் 14 கிலோ மீட்டர் சுற்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த அண்ணாமலை, திருவண்ணாமலை ஆனது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், தற்போது இந்த கலிகாலத்தில் கல் மலையாகவும் விளங்குகிறது.

 

அஷ்ட லிங்கம்

எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.

  1. இந்திர லிங்கம்
  2. அக்னி லிங்கம்
  3. எம லிங்கம்
  4. வருண லிங்கம்
  5. வாயு லிங்கம்
  6. குபேர லிங்கம்
  7. ஈசானிய லிங்கம்
  8. நிருதி லிங்கம்.

ஆகியவை இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு இது மட்டுமில்லாமல் ஆதி அண்ணாமலை அண்ணாமலை சந்திர சூரிய லிங்கங்கள் 16 விநாயகர் கோயில்கள் 7 முருகன் கோயில்கள் ஆதி காமாட்சி அம்மன் என்று மொத்தம் 99 கோவில்கள் கொண்ட தெய்வீக பாதை தான் இந்த அண்ணாமலை கிரிவலம். திருவண்ணாமலை சுற்றி கிரிவலம் மேற்கொண்டால் தீராத நோய்களும் தீருமாம் அனைத்து பாவங்களும் விலகி மோட்சம் கிடைக்கும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஐதீகம்.

Thiruvannamalai Girivalam எப்படி கிரிவலம் வரவேண்டும்?

1.  கிரிவலம்(Thiruvannamalai Girivalam) என்பது ஓடக்கூடிய செயலல்ல,

2.  ஒரு பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்றால் கையில் விளக்கு வைத்து எப்படி பொறுமையாக நடந்து வருவார்களோ அப்படித்தான் வரவேண்டும்,

3.  எப்படி என்றால் அமைதியாகவும் ஆனந்தமாகவும் தன் வயிற்றில் இருக்கக்கூடிய குழந்தை பத்திரமாக காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து பயபக்தியுடன் நடந்து வருவது போன்று நடந்து வர வேண்டுமாம்,

4.  இப்படி நடக்கும்போது இறை சிந்தனையுடன் இறை நாமத்தை மனதில் சொல்லிக் கொண்டே நடக்க வேண்டும்,

5.  வாழ்க்கைத் தேவைகளை ஒரு சங்கல்பம் ஆக்கி அந்த சங்கல்பத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே நடக்க வேண்டும்,

6.  இயற்கையால் ஆன ஒரு இனிப்பை வாங்கி கிரிவலப்பாதையில் இருப்பவர்களுக்கு அல்லது புற்றுக்கு அருகில் வைக்கும் பட்சத்தில் ஒரு ஆயிரம் உயிர் அல்லது எழும்புகள் அதை உண்டு வாழும் அதுபோன்று நற்காரியங்களை செய்த வண்ணமே நீங்கள் கிரிவலம் வர வேண்டும்,

7.  கிரிவலம் செல்லும் பொழுது நீங்கள் அணிந்திருக்கும் மேலாடை மிகவும் லேசாக நல்ல தாராளமான தளர்வான ஆடை அணிந்து கொள்ள வேண்டும் கதர் ஆடையை அணிந்து கொள்வது மிகவும் நல்லது.

 

கிரிவலம் செய்யும் முறை

சரி, இந்த மலை கிரிவலம் வருவது எல்லாவற்றிற்கும் முறை என்று ஒன்று உண்டு, அதே போல கிரிவலத்தை தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை கோவிலுக்கு அருகே இருக்கும் பூத நாராயணர் தரிசித்து அனுமதி பெற வேண்டும், ஏன் தெரியுமா? இந்த பூத நாராயணர் தான் திருவண்ணாமலை காவல் தெய்வம் அவரை வணங்கி விட்டு புறப்பட்டாள் எந்தவித தடையுமில்லாமல் கிரிவலத்தை முழுமையாக சுற்றி விடமுடியும் என்பது நம்பிக்கை. அதன் பின்பு இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டும், அதன்பிறகு ஆலயம் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசிக்க வேண்டும், அதன்பிறகு கோவில் ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை கிரிவலம் வர தொடங்க வேண்டுமாம். கிரிவலத்தை இப்படித்தான் வலம் வரவேண்டும் என்ற நீதி இருக்கிறதாம்.

 

 

கிரிவலம் எப்படி வந்தது யாரால் வந்தது?

சரி, இந்த (Thiruvannamalai Girivalam) கிரிவலம் எப்படி வந்தது யாரால் வந்தது தோன்றிய பிறகு மழையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார் அவர் நடத்திய ஒரு திருவிளையாடல் தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன்முதலில் கிரிவலம் சென்று பார்வதிதேவி தான் இதன் பின்னணியில் அமைந்த புராண வரலாறு இதோ ஒரு முறை கைலாயத்தில் சிவபெருமான் கண்களை பார்வதிதேவி மூடியதாகவும் உயிரினங்கள் அனைத்தும் இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால், பார்வதிதேவி திருவண்ணாமலைக்கு வந்தார் அவர் தவத்தைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார் வேண்டிய வரம் கேள் என்றார் பார்வதி தேவி என்றும் பிரியாதிருக்கும் படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், உடனே சிவபெருமான் நீ என்னை சுற்றி வர வேண்டும் அதனை ஏற்றுக்கொண்ட பார்வதிதேவி திருவண்ணாமலையில் ஈசனே மலையாக இருப்பதால் அந்த தொடங்கினார் என்பது சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமம் ஆகும், என்பதை உணர்ந்ததால் அவர் தன் தலைமீது கை கூப்பியபடி வலம் வந்தார் ஆம் இப்படியாக மிகவும் பக்தி சிரத்தையோடு அவருக்கு சிவபெருமான் கிரிவலப்பாதையில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்திலும் ஈசானிய பகுதியில் 22 இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார். பார்வதி தேவிக்கு தனது உடலின் இடப்பாகத்தை வழங்கி அவரை ஐக்கியமாகி கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார் அப்போது பார்வதி நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்து போல திருவண்ணாமலை கிரிவலம் வரும் ஒவ்வொருவருக்கும் அருள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அதற்கு சிவபெருமான் சம்மதித்தார் இந்த முறையில் பெருமானும் சம்பாதித்தார் இந்த முறையில்தான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பழக்கத்திற்கு வந்தது.

 

எந்த நாட்களில் கிரிவலம் வர வேண்டும்?

கிரிவலம் ( வந்து சிவபெருமானிடம் பார்வதிதேவி பலன் பெற்றது ஒரு பௌர்ணமி தினம் ஆகும் எனவே பவுர்ணமி கிரிவலம் செல்வது கூடுதல் பலன்களை தருவதாக சொல்லப்படுகிறது, அதுவும் சித்திரா பெளர்ணமி அன்று கிரிவலம் வருவது மிக மிக சிறப்பு. பொதுவாக எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் கிரிவலம் செல்லலாம் நேரம் காலம் எல்லாம் கிடையாது இரவில் கூட கிரிவலம் செல்பவர்கள் இருக்கிறார்களாம் இப்படி நீங்கள் கிரிவலம் செல்லும்போது ஒவ்வொரு நாளும் திருவண்ணாமலை ஆனது ஒவ்வொரு விதமாக காட்சியளிக்கும் அதை கிரிவலம் செல்பவர்கள் உன்னிப்பாக கவனித்தால் தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் பக்தர்கள் முன்பெல்லாம் திருவண்ணாமலையில் வருடப்பிறப்பு மாதப்பிறப்பு பவுர்ணமி அமாவாசை கார்த்திகை நட்சத்திரம் சிவராத்திரி நாட்களில் தான் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர் பின்னர் அமாவாசை கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது பௌர்ணமி தினத்தன்று தான் வெளிப்படுகிறது என்பதை நம் முன்னோர்கள் தெரிந்து வைத்த பிறகு பவுர்ணமி கிரிவலம் செல்வது வழக்கமாகிவிட்டது பொதுவாக ஜோதிடத்தில் சந்திரனை மனோகாரகன் என்பார்கள் இப்படி சந்திரன் உச்சம் பெற்றிருக்கும் இந்த பௌர்ணமி நாளில் கிரிவலம் வரும்போது பக்தர்களுக்கு மனோதிடம் கிடைக்குமாம் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்குமாம் 24 மணி நேரமும் எந்த நாளும் கிரிவலம் வருகிறார்கள். பக்தர்கள் மலையை மட்டும் நீங்கள் சுற்றி வர நினைத்தால் 3 மணி நேரம் ஆகும், அதே வேளையில் மலையை சுற்றி இருக்கும் அத்தனை சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு பின்பு வந்தால் குறைந்தது 5 மணி நேரமாவது ஆகும்.

 

 

அறிவியல் உளவியல் நன்மைகள்

அறிவியல் ரீதியாக நம் உடம்பில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகிறது தெரியுமா அண்ணாமலையின் அடிவாரத்தில் சுற்றி வலம் வரும்போது சக்திமிக்க மூலிகைச் செடி கொடிகளின் காற்றினை சுவாசிப்பதால் உடல்நலம் மேம்படுவதோடு நம் வாழ்வை சிறப்பானதாக மாற்றமான நம்பிக்கையோடு நாம் கிரிவலம் வரும் பொழுது நிச்சயம் அவர்களுடைய அருளும் ஆசீர்வாதமும் முக்கியமாக ஒரு தெய்வீக அனுபவம் பல அதிசயங்களும் ஆச்சரியங்களும் கிடைக்கப்பெறும் என்பது சத்தியமான உண்மையாகும்.

Thiruvannamalai Girivalam Video (திருவண்ணாமலை கிரிவலம்) முழு விளக்கம்

 

Don’t Miss It..
உடலுக்கு அற்புத நன்மை தரும் நாடி சுத்தி
Click Here

செல்வ வளம் தரும் குபேர கிரிவலம் Kubera Girivalam

Click Here

சித்ரா பவுர்ணமி கிரிவலம் மற்றும் விரதம்

Click Here

ஆகிய பதிவுகளையும் பாருங்கள்.

மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்கள் Facebook, Twitter, உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

 

 

2 thoughts on “Thiruvannamalai Girivalam Special

Leave a Reply

Your email address will not be published.