Nakshatra symbol Logo God

Nakshatra symbol Logo God

பணம் புகழ் செல்வாக்கு தரும் 27 நட்சத்திரத்திற்குரிய முத்திரைகள் ( Symbol Logo God )

தொழில் செய்வோர் புதிதாகத் தொழில் தொடங்குவோர் தங்களுடைய நட்சத்திரத்திற்குரிய முத்திரைகள் மற்றும் குறியீடுகளை 27 நட்சத்திரங்கள் (Nakshatra symbol Logo God) தொழிலில் பயன்படுத்தினால் தொழிலில் மிகச்சிறப்பான வளர்ச்சி உண்டாகும், இது அனுபவபூர்வமான உண்மை.

அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குதிரையின் முகம் அல்லது ஆண் குதிரையின் படத்தை தங்களது விசிட்டிங் கார்டு மற்றும் பெயர் பலகை அல்லது லோகோ போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இவர்கள் தங்கள் அலுவலகத்தில் அஸ்வினி தேவர்கள் படத்தை மாட்டி வைக்கலாம்.
வழிபடவேண்டிய தெய்வம்
அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கோண அமைப்பு மற்றும் யானை படத்தையும் பயன்படுத்தலாம், அலுவலகத்தில் நெல்லி மரத்தில் படத்தை மாட்டி வைக்கலாம், இவ்வாறு செய்யும்பொழுது தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
வழிபடவேண்டிய தெய்வம்
பரணி – ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)

கார்த்திகை

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறு கத்தி போன்ற வடிவம் அல்லது ஆடு படத்தை மாட்டி வைக்கலாம், அலுவலகத்தில் கண்டிப்பாக கார்த்திகேயனின் படத்தை மாட்டி வைத்து வழிபடவேண்டும். விசிடிங்கார்டில் மயில் படத்தை இடம்பெறச் செய்யலாம்.
வழிபடவேண்டிய தெய்வம்
கார்த்திகை – ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)

ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வண்டி போன்ற வடிவத்தை ஏற்படுத்தலாம் ஆண் நாகம் நாவல் மரம் போன்ற படங்களையும் பயன்படுத்தலாம் அலுவலகத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் படத்தை வைத்து வழிபட்டால் தொழில் மிகச் சிறப்பாக நடக்கும் கோபுரம் ஆலமரம் ஆகிய படங்களை பயன்படுத்தலாம்.
வழிபடவேண்டிய தெய்வம்
ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன்

மிருகசீரிடம்

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மான் தலை வடிவம் நன்மைகள் தரும். மேலும் கோழி படத்தையும் பயன்படுத்தலாம். அலுவலகத்தில் சந்திரன் படத்தை மாட்டி வைக்கவும் இவ்வாறு செய்யும்பொழுது தொழில் மிகச் சிறப்பாக நடைபெறும்.
வழிபடவேண்டிய தெய்வம்
மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இளந்தளிர் அல்லது வைரம் படத்தினை பயன்படுத்தலாம், குருவியின் படம் சிறந்த அலுவலகத்தில் சிவன் படத்தை வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
வழிபடவேண்டிய தெய்வம்
திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குளத்தின் படமும் அம்பும் அது வைக்கும் கூடு படமும் சிறந்தது. அலுவலகத்தில் அன்னப்பறவை, காமதேனு ஸ்ரீராமர் மற்றும் தாய்மையை குறிக்கும் படங்கள் இவற்றை வைத்து வணங்கி வந்தால் தொழில் சிறப்பாக இருக்கும்.
வழிபடவேண்டிய தெய்வம்
புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஷ்ணு)

பூசம்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலை, ஆண் ஆடு, பசுவின் மடி, வட்டம் போன்ற சின்னங்களை பயன்படுத்தலாம். அலுவலகத்தில் குருவின் படம் வைத்து வழிபட வேண்டும். தாமரை கிளி, ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் போன்ற படங்களை மாட்டி வைக்கலாம்.
வழிபடவேண்டிய தெய்வம்
பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)

ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு யானை, நாகம், சுருண்ட நிலையில் உள்ள பாம்பு போன்ற படங்களை சின்னங்களாக பயன்படுத்தலாம். அலுவலகத்திற்கு ராமர் பட்டாபிஷேகம் படம் வைத்து வணங்கி வரலாம்.
வழிபடவேண்டிய தெய்வம்
ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஊஞ்சல், ஆலமரம், ஆண் கழுகு, கோழி போன்ற படங்களை அலுவலக முத்திரையாக பயன்படுத்தலாம். மேலும் உங்களுடைய தொழில் செய்யும் இடத்தில் உங்கள் முன்னோர்களின் படத்தை வைத்து வணங்குவது மிகச் சிறப்பான பலன் தரும்.
வழிபடவேண்டிய தெய்வம்
மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

பூரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கட்டில் கால், கண் போன்ற அமைப்பு உடைய சித்திரமும், பெண் கழுகு படம், புரச மரம் படம் முத்திரைகளுக்கு ஏற்றது. அலுவலகங்களில் திருமண அரங்கம் படம், அத்திமரத்தின் படத்தையும் மாட்டி வைப்பது பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.
வழிபடவேண்டிய தெய்வம்
பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி

உத்திரம்

உத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கட்டில் கால், பசுமாடு, கழுகு, குரு, கண் போன்ற படங்களை பயன்படுத்தலாம், அலுவலகத்தில் சிவன் சக்தி திருமணக்கோலத்தில் இருக்கும் படத்தை வைத்து வழிபட அதிக நன்மைகள் கிடைக்கும்.
வழிபடவேண்டிய தெய்வம்
உத்திரம் – ஸ்ரீ மகாலக்மி தேவி

அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உள்ளங்கை, பருந்து, கிளி போன்ற சின்னங்களை கையாளலாம். அலுவலகத்திற்கு வில்வமரம் சூரியன் படங்களை வைத்து வழிபடலாம்.
வழிபடவேண்டிய தெய்வம்
ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முத்து, ஒளி பொருந்திய நகைகள், ஆண் புலி போன்றவற்றை சின்னங்களாக பயன்படுத்தலாம். அலுவலகத்தில் விஸ்வகர்மாவின் படத்தை மாட்டி வழிபடலாம்.
வழிபடவேண்டிய தெய்வம்
சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் மாணிக்கம், காற்றில் அசையும் தளிர், மொட்டு, தேனீ, மருதமரம் போன்ற படங்களை பயன்படுத்தலாம். அலுவலகத்தில் நரசிம்ம மூர்த்தியின் படம் வைத்து வணங்கி வர தொழில் மிகச் சிறப்பாக அமையும்.
வழிபடவேண்டிய தெய்வம்
சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சக்கரம் போன்ற அமைப்பு முக்கிய சின்னமாக பயன்படுத்த வேண்டும். மேலும் பெண்புலி, செங்குருவி போன்ற படங்களையும் பயன்படுத்தலாம். அலுவலகத்தில் அக்னி பகவானின் படம் வைத்து வணங்கி வந்தால் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்.
வழிபடவேண்டிய தெய்வம்
விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்

அனுஷம்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் தாமரை மலர் முக்கிய சின்னமாக பயன்படுத்த வேண்டும் மேலும் வரவேற்பு வளைவு, குடை பெண் மான், வானம் பாடி பறவைகள், மகிழ மரம் போன்ற படங்களை பயன்படுத்தலாம், அலுவலகத்தில் நட்பு பற்றி விளக்கும் படத்தை மாட்டி வைத்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
வழிபடவேண்டிய தெய்வம்
அனுசம் – ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்

கேட்டை

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதில் அணியும் குண்டலம், அங்குசம், ஆண் மான், சாதகப் பட்சி போன்ற உருவங்களை அலுவலகங்களில் பயன்படுத்தலாம், உங்களுக்குப் பிடித்த தலைவரின் படத்தையும் மூத்தவர்களின் படத்தையும் மாட்டி வைக்கலாம்.
வழிபடவேண்டிய தெய்வம்
கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

மூலம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேர்கள் படத்தை முக்கிய சின்னமாக பயன்படுத்த வேண்டும். மற்றும் அங்குசம், பெண் நாய் போன்ற படங்களையும் பயன்படுத்துவது சிறந்தது, அலுவலகத்தில் வேர்கள் படத்தை மாற்றுவது மிகச் சிறப்பான பலன்களைத் தரும்.
வழிபடவேண்டிய தெய்வம்
மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்

ராடம்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு அரைவட்ட சந்திரன், யானைத் தந்தம், இந்த படங்களையும் விசிறி, சதுரம் போன்ற படங்களையும், அலுவலகத்தில் நீர்வீழ்ச்சியில் போன்ற படத்தையும் மாட்டி வைத்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
வழிபடவேண்டிய தெய்வம்
பூராடம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

உத்திராடம்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு யானையின் தலை, பசு, பலாமரம், யானை தந்தம் சதுரம் ஆகிய படங்களை பயன்படுத்தலாம். அலுவலகத்தில் தர்மம் கொடுப்பது போன்ற படத்தை வைத்தால் நன்மைகள் உண்டாகும்.
வழிபடவேண்டிய தெய்வம்
உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்

திருவோணம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வில்லை போன்ற வடிவம், காது, நாரை, மூன்று காலடிகள் போன்ற வடிவங்களை முத்திரையாகப் பயன்படுத்தலாம். அலுவலகத்தில் மகா விஷ்ணு கருடன் மீது அமர்ந்துள்ள படத்தை வைத்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நடக்கும்.
வழிபடவேண்டிய தெய்வம்
திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு)

அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புல்லாங்குழல் அல்லது மிருதங்க வடிவம் சிறந்தது. மேலும் பெண்சிங்கம், பொன்வண்டு போன்ற படங்களையும் பயன்படுத்தலாம். அலுவலகத்தில் புல்லாங்குழல் படமும் அல்லது இசை சம்பந்தப்பட்ட படத்தை மாட்டி வைத்தால் நன்மை உண்டாகும்.
வழிபடவேண்டிய தெய்வம்
அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)

சதயம்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வட்டம், நூறு பூக்கள், நூறு நட்சத்திரங்கள் போன்ற படங்கள் சிறந்தது. பெண் குதிரை போன்ற முத்திரைகளையும் பயன்படுத்தலாம். அலுவலகத்தில் நீர்வீழ்ச்சி நிறைய பூக்கள் நிறைய நட்சத்திரங்கள் உள்ள படத்தையும் மாட்டிக்கொள்வது பல நன்மைகளை உண்டாக்கும்.
வழிபடவேண்டிய தெய்வம்
சதயம் – ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கத்தி, இரு முகங்கள் கொண்ட மனிதன் படம், இரு கால்கள், சிங்கம், மாடப் புறா போன்ற படங்கள் சிறப்பானது. அலுவலகத்தில் சிவன் அல்லது அக்கினியின் படம் வைத்து வழிபடலாம் மிகச்சிறப்பாக இருக்கும்.
வழிபடவேண்டிய தெய்வம்
பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கத்தி, பசு, குயில், வேப்பமரம், ஆழமான தண்ணீரில் உள்ள பாம்பு போன்ற படங்கள் முத்திரைக்கு ஏற்றது, இவர்கள் அலுவலகத்தில் எரியும் ஜோதி படத்தை மாட்டுவது மிகச்சிறப்பான பலன் தரும்.
வழிபடவேண்டிய தெய்வம்
உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மீன் வடிவம் மிக நல்ல மிகச் சிறந்த சின்னமாகும். மேலும் மத்தளம், தோனி, யானை, மயில் போன்ற படங்களை இவர்கள் சின்னங்களாக பயன்படுத்தலாம். அலுவலகத்தில் இரட்டை மீன் படத்தை மாட்டுவது மிகச் சிறப்பான பலன்களை தரும். மேலும் கால்நடைகளை மேய்க்கும் படம், பயணங்கள் சம்பந்தமான படங்களையும் வைக்கலாம்.
வழிபடவேண்டிய தெய்வம்
ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்

தொழில் மந்த நிலையில் இருந்தால் நாம் குறிப்பிட்டுள்ள படங்களைந அந்த நட்சத்திரம் கொண்டவர்கள் அலுவலகத்தில் மாட்டி வைப்பதும் முத்திரையாக பயன்படுத்துவதும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் நீங்கள் அனுபவபூர்வமாக உணரலாம்.

27 நட்சத்திரங்கள் | Nakshatra symbol Logo God வீடியோ

Guru peyarchi 2020(குரு பெயர்ச்சி 2020)

Nadi Suddhi | நாடி சுத்தி

ஆகிய பதிவுகளையும் பாருங்கள்.

மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்களில் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

One thought on “Nakshatra symbol Logo God

Leave a Reply

Your email address will not be published.