Kubera Girivalam Procedure In Tamil

Kubera Girivalam Procedure In Tamil

குபேர கிரிவலம் என்றால் என்ன?

What is Kubera Girivalam?

திருவண்ணாமலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை செல்வத்தின் அதிபதியான குபேரன் சூசகமாக வருவது வழக்கம் அப்படி அவர் வரும் நேரத்தில் அவரது தலைமையில் நாமும் திருவண்ணாமலை கிரிவலம் வந்தால் அண்ணாமலையாரின் அருளும் சித்தர்களின் ஆசியும் குபேர சம்பத்து ஒன்றாக கிடைக்கும். பல நூற்றாண்டுகளாக இருந்த இந்த ரகசியமானது ஒரு ஜோதிட மாத இதழ்கள் மூலமாக வெளியிடப்பட்டது, (Kubera Girivalam Procedure In Tamil)  கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்தசி திதி வரும் நாளில் குபேரன் வானுலகில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகிறார் வந்து சிவலிங்கத்திற்கு ஒரு மணிநேரம் பூஜை செய்கிறார் பிறகு அங்கிருந்து கிரிவலம் புறப்படுகிறார், தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளையே தேய்பிறை சிவராத்திரி என்று நாம் பல கோடி ஆண்டுகளாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் அண்ணாமலை குபேர லிங்கத்தை குபேரன் பூஜை செய்வார்.

குபேர லிங்கம் இருக்கும் இடத்திலிருந்து ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நாம் இருக்க வேண்டும் குபேர லிங்கம் இருக்கும் பகுதியில் இருந்து நமது கோரிக்கைகளை நினைத்து குபேரலிங்கம் வேண்டிக்கொள்ள வேண்டும், அங்கிருந்து கிரிவலம் புறப்படவேண்டும், கிரிவலத்தை நிறைவு செய்ய குபேர லிங்கம் இருக்கும் இடத்திற்கு வரவேண்டும், குபேரலிங்கம் நிறைவு செய்யும் போது இரவு 11 முதல் 12 மணி ஆகியிருக்கும், விழுந்ததும் வேறு எங்கும் உறவினர் வீடு வேறு ஆலயங்கள் செல்லாமல் நமது வீட்டிற்கு செல்ல வேண்டும். அப்படி சென்றால் மட்டுமே, குபேர கிரிவலம் சென்ற மாகாண முழு பலனும் நமக்குக் கிட்டும் புதன் கிழமையாக இருந்தால் பச்சை நிற ஆடை அணிந்து கொண்டு வருவது, அன்று வியாழக்கிழமை கிரி வலம் வருபவர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து, கொண்டு வரலாம் ஒரே ஒரு முறை இந்த கிரிவலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கூட பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. வாழ்க்கையில். பணம் கஷ்டம் இந்நிலையில் இருந்தவர்களுக்கு ஒரு நிரந்தர வேலை அல்லது தொழில் அமைந்திருக்கிறது. பலருக்கு தொழிலில் அமோக வளர்ச்சி கிடைத்திருக்கிறது, பலர் தமது சக்திக்கு மீறிய கடன் வாங்கி பல ஆண்டுகளாக திண்டாடி இருப்பர் அவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் அத்தனை கடனும் தீரும் அளவுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது, பூர்வ புண்ணியம் மிகுந்த ஆத்மாக்கள் சிலருக்கு குபேரனின் தரிசனமும் கிடைத்திருக்கிறது.

அதனாலேயே அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கின்றன, இன்றைய காலகட்டத்தில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பணம் நமக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது, கொஞ்சம் அதிகமாகவே பணம் தேவைப்படுகிறது அதற்கு திருவண்ணாமலை கிரிவலம் வந்து அண்ணாமலையாரின் அருளும் சித்தர்களின் ஆசியும் குபேர லிங்க வழிபாடும் அதன் பின் லக்ஷ்மி வழிபாடு செய்வது வாழ்வில் நாம் செய்த அரும் பெரும் பாக்கியமே. தற்போது வலம் வரும் பாதை, ஜடவர்ம பாண்டிய மன்னனால் கி.பி 1240ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. மலையைச்சுற்றிலும் உள்ள 300க்கும் மேற்பட்ட குளங்கள் இவருடைய காலத்திலேயே உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் வரும் கிரிவலப் பாதையில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன. அதே போல் ஏராளமான சித்தர்களின் கோவில்களும் உள்ளன. இன்றைக்கும் சித்தர்கள், யோகிகள், தேவர்கள் கோவிலை கிரிவலம் வருவதாக ஐதீகம்.

kubera muthirai trendsbell

குபேர முத்திரை

What is Kubera Mudra?

நாம் கிரிவலம் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விசயத்தில் இந்த குபேர முத்திரை ஒன்று. கட்டை விரைந்த நுனிப்பதுதியில் ஆள் காட்டி விரல் மற்றும் நடுவிரலில் நுனியை சேர்க்க வேண்டும். அதன் பிறகு மோதிர விரல் மற்றும் சுண்டு விரலின் நுனியை மடக்கி உள்ளகையில் அழுத்த வேண்டும். இந்த நிலையில் நமது உள்ளங்கையானது கீழ்நோக்கி இல்லாமல் மேல் நோக்கி இருக்க வேண்டும். இதையே நாம் குபேர முத்திரை என்கிறோம். இவ்வாறு செய்யும் போது சகல செளபாக்கியமும், குபேர பகவானின் அனுகிரகமும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

குபேர கிரிவல பாதை

Kubera Girivalam Procedure

திருவண்ணாமலை மலையில் தெய்வமாகவும் வழிபாட்டிற்கு உரியதாக அமைந்துள்ளது என்றால் சூரியன் நெருப்பின் நிறம் சிவப்பு குறிக்கும் அசலம் என்றால் மலை என்றும் பொருள் தரும் எனவே அருணாச்சலம் என்றால் சிவந்த நிறத்தை உடைய மலை என்று பொருள் எட்டுத் திக்கிலும் அஷ்ட லிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது அஷ்ட லிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம் அக்னி லிங்கம் எம லிங்கம் நிருதி லிங்கம் வருண லிங்கம் வாயு லிங்கம் குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் போகும் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் வருகின்ற தேய்பிறை சிவராத்திரி அன்று உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேரன் பூமிக்கு வந்து திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம் பிரதோஷம் அதாவது மாலை நான்கு முப்பது முதல் 6 மணி வரை பூஜை செய்கிறார் பூஜை செய்துவிட்டு இரவு 7 மணியளவில் குபேர பகவானை கிரிவலம் செல்கிறார் என்பது ஐதீகம்.

இந்த நாளையே குபேரகிரிவலம் என்று பக்தர்கள் அழைக்கிறார்கள் குபேரன் வடக்கு திசைக்கு அதிபதியாக விளங்குகிறார் மேலும் நவகிரகங்களின் குருவின் பரிபூரண அருளைப் பெற்றவர் என்பதாலும் குபேரனை வழிபட்டால் சகல விதமான செல்வங்களும் பூர்வ ஜென்ம பாவங்களும் நீங்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை ஆகும் அதே நாளில் நாமும் குபேர கிரிவலம் சென்றால் நமக்கு அண்ணாமலையாரின் அருளும் சித்தர்களின் அருளாசி குபேரனது அருளும் கிடைக்கும் இந்த ஆண்டிற்கான குபேர கிரிவலம் வருகின்றனர் அவருடன் கலந்துகொண்டு குபேரனின் அருள் பெறலாம் அதிலும் குருவினை ராசி அதிபதியாக கொண்ட தனுசு மற்றும் மீன ராசியினர் மற்றும் தனுசு மற்றும் மீன ராசி இலக்கின காரர்களுக்கு குரு பலம் குறைவாக இருப்பவர்களும் கலந்துகொண்டு குருவின் பரிபூரண அருளைப் பெறலாம்.

குபேர கிரிவலம் செல்லும் போது செய்யக்கூடாத சில விஷயங்கள் என்ன?

Don’t Do When Go Kubera Girivalam

1. உடன் வருபவர்களிடம் பேசிக் கொண்டே வருவது.
2. ஏதாவது ஒன்றை சாப்பிட்டுக்கொண்டே சுற்றுவது இவையெல்லாம் கூடாது.
3. கண்டிப்பாக முதலில் தேவையில்லாத பேச்சுக்களை பேசாமல் கிரிவலம் வர வேண்டும்.
4. அதற்காகத்தான் மந்திரம் ஜெயிப்பது சங்கல்பத்தை சொல்வது போன்ற செயல்களை நீங்கள் வைத்துக்கொள்ளவேண்டும்.
5. கிரிவலம் செல்லும்போது வேகமாக நடப்பது அல்லது போடுவதோ கூடாது.

 

குபேர கிரிவலத்தில் கலந்து கொள்ளும்போது நான் சொல்லுவதற்கு உகந்த மந்திரங்கள்

ஓம் காமாட்சி அம்மனே நமஹ,
ஓம் பதினெட்டாம்படி கருப்பர் நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ,
ஓம் அருணாச்சலாய நமஹ,
ஓம் குபேராய நமஹ,
ஓம் லக்ஷ்மியே நமஹ.

Kubera Girivalam Procedure In Tamil video

 

Thiruvannamalai Girivalam (திருவண்ணாமலை கிரிவலம் முழு விளக்கம் வீடியோ) Click Here

ஆகிய பதிவுகளையும் பாருங்கள்.

மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்கள் Facebook, Twitter, உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

 

 

One thought on “Kubera Girivalam Procedure In Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *