Table of Contents
நலவாரியம் (Nalavariyam) பதிவு முறைகள்:-
முழுவிளக்கம் பெற வீடியோவை பார்க்கவும்
- விண்ணப்பதாரர் 18 முதல் – 60 வயதுதிற்க்குள் இருத்தல் வேண்டும்.(tholilalar nala variyam)
- தொழிலாளி தனது இரண்டு புகைப்படத்தில் ஒன்றை விண்ணப்பத்தில் ஒட்டி, மற்றொரு புகைப்படத்தை ஒரு உறையில் வைத்து விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் அளித்து ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
- நலவாரிய (Nala variyam) பதிவு கட்டணம் ஏதும் இல்லை.
- பதிவு விண்ணப்பத்தில் சம்மந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர் என்பதற்கான சான்று கீழ்க்கண்ட எவரேனும் ஒருவரால் அளிக்கப்பட வேண்டும்.
- வேலையளிப்பவர்,
- பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் (கட்டுமான வாரியம் மட்டும்).
- கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் அரசு அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் (kattumana tholilalar nala variyam).
பதிவு பெற்ற தொழிற் சங்கம். - கிராம நிர்வாக அலுவலர்
(வருவாய் ஆய்வாளர் – சென்னை மாவட்டத்தில் மட்டும்), - தொழிலாளர் உதவி ஆய்வாளர் அல்லது உதவி இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் இதர 15 நல வாரியங்களுக்கு மட்டும்).
- பதிவு விண்ணப்பத்தில், தொழிலாளர் செய்யும் வேலை குறித்த பணிச்சான்றினை தொழிற்சங்கம் வழங்கியிருந்தால், தொழிற்சங்கப் பதிவு எண் மற்றும் முகவரியுடன் கூடிய முத்திரை இடம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது/ இருப்பிடம் தொடர்பாக கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் சான்றொப்பமிட்ட நகலினை (Attested Copy) விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
- பிறப்பு / இறப்பு பதிவாளரின் சான்று.
- பள்ளி அல்லது கல்லுரிச்சான்று
- வாகன ஓட்டுநர் உரிம நகல்,
- தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை,
- சான்றொப்பமிட்ட குடும்ப அடையாள அட்டை
- அரசு மருத்துவரிடமிருந்து
(சிவில் சர்ஜன் தரத்திற்கு குறையாதவரிடம் பெறப்பட்ட வயது குறித்த சான்று – அசலில்) - தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு.
நலவாரிய (Nalavariyam) இதர பதிவுகள்
Nala Nariyam Card Apply Online Tamil
யார் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுபினர் ஆக முடியும்?
அமைப்பு சாரா தொழிலாளர் நலவரியத்தில் பதிவு செய்வது எப்படி?
தொலைந்து போன அடையாள அட்டை பெறுவது எப்படி?
திருமண நிதி | அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம்
Nalavariyam | விபத்து மற்றும் உடல் ஊனம் நிதி பெறுவது எப்படி?
Nalavariyam | மரணம் | ஈமசடங்கு நிதி பெறுவது எப்படி?
Nalavariyam | காப்பீடு தொகை பெறுவது எப்படி?
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள்(Nalavariyam)
தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற அமைப்புசாரா தொழில் வேலை செய்பவர்கள் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்கு படுத்தவும், அவர்களின் சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழக அரசு 1982ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல் சட்டத்தை கொண்டுவந்தது.இதன்படி தமிழக அரசு 17 நல வாரியங்களாக பிரிந்துள்ளனர்.
நல வாரிய தொழிகள்
அடையாள அட்டை புதுப்பித்தல் (How to Renewal Nalavariyam id card )
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம், புதுப்பிக்க எந்த கட்டணமும் இல்லை, அறுபது வயது நிறைவடைந்த தொழிலாளியின் அடையாள அட்டை புதுப்பிக்க முடியாது, உறுப்பினரால் அளிக்கப்படும் புதுப்பித்தல் விண்ணப்பம் தொழிலாளர் உதவி அலுவலகத்தில் பெறப்பட்டு, உரிய சரிபார்த்தலுக்குப் பிறகே அடையாள அட்டை உறுப்பினருக்கு திரும்ப அளிக்கப்படும்.
Duplicate அடையாள அட்டை பெறுவது எப்படி?
அடையாள அட்டை தொலைந்து விட்டால் மறு அடையாள அட்டை வழங்குமாறு கேட்க்கும் மனுவின் மீது விசாரணை மேற்கொண்டு இரண்டாம்படி அடையாள அட்டை கோரும் நபர் அவர்தானா என உறுதி செய்து பிறகு தொழிலாளர் உதவி ஆணையரால் இரண்டாம்படி (Duplicate Id Card ) அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டை பெறுவதற்க்கு ரூ.20/- கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
தொழிலாளர் நல வாரியம் (Nalavariyam) நிதி உதவி பெற வேண்டிய ஆவணங்கள்
Common Document For All
- Original ID Card,
- Aadhar Card,
- Bank Account.
திருமணம் உதவி தொகை பெற
1.திருமண அழைப்பிதழ்
2.திருமணம் நடந்தற்க்கான சான்று
3.திருமணம் செய்து கொள்பவர்கள்
4.ஆணாக இருந்தால் 21 வயது, பெண்ணுக்கு 18 வயதும் நிறைவு செய்தார் என நிரூபிக்கும் வயது சான்றிதழ்
மகப்பேறு / பிரசவம் உதவிதொகை பெற,
1.பிறப்பு சான்றிதழ்
2.குறைப்பிரசவம்/ கருக்கலைப்பாக இருந்தால் பதிவு பெற்ற மருத்துவரின் சான்று.
கல்வி உதவி தொகை பெற,
- கல்வி பயிலும் வருடத்திலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
- பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும் படிப்பு சான்றிதழ் பதிவு பெற்ற தொழிலாளியின் மகள் என்றும் கல்வி பயிலும் வருடத்தையும் குறிப்பிட வேண்டும்.
- சான்றொப்பமிட்ட தேர்ச்சி பெற்ற மதிப்பெண் பட்டியல் / பள்ளி மாற்று சான்றிதழ்.
- கல்லுரி படிப்பில் சேர்ந்து பயில்வது குறித்தான கல்வி நிலைய முதல்வரிடமிருந்து பெறப்பட்ட அசல் சான்றிதழ்.
- விடுதியில் தங்கி படிப்பவர் முதல்வரிடம் அல்லது விடுதி காப்பாளரிடம் இருந்து பெறப்பட்ட சான்று.
கண் கண்ணாடி உதவி தொகை பெற,
கண் மருத்துவரின் பரிசோதனைச் சான்று மற்றும் கண் கண்ணாடி வாங்கியதற்கான பில்.
ஓய்வூதியம் பெற,
இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ.
முடக்க ஓய்வூதியம் பெற
இரண்டு பாஸ்போர்ட் போட்டோ, மருத்துவச் சான்று அரசு சிவில் சர்ஜனால் வழங்கப்பட்டது,
குடும்ப ஓய்வூதியம் பெற,
இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ ஓய்வூதியதாரரின் ஒரிஜினல் இறப்பு சான்றிதழ், வாரிசு உரிமைச் சான்றிதழ்
விபத்தில் மரணம்
ஒரிஜினல் இறப்பு சான்றிதழ், முதல் தகவல் அறிக்கை (FIR), பிரேதப் பரிசோதனை அறிக்கை.
விபத்து மரணம் உதவி தொகை
மருத்துவச்சான்று பணித்திறன் இழப்புச் சான்று, ஹாஸ்பிடல் டிஸ்சார்ஜ் சம்மரி முதல் தகவல் அறிக்கை (FIR)
இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவி தொகை
ஒரிஜினல் இறப்பு சான்று.
மருத்துவ காப்பீட்டு திட்டம்
ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ.1,00,000/- வழங்க ஏற்ப்படு செய்ய பட்டுள்ளது. சில சிகிச்சை முறைகக்கு ஒரு வருடத்திற்கு ரூ.1,50,000/- வரை வழங்கப்படும்.
தொடர்புக்கு,
நலவாரிய (Nalavariyam) சங்கத்தின் பெயர் :
தோழர்கள் கார் ஓட்டுநர் அமைப்புசாரா தொழிற்சங்கம்
அரசு பதிவு எண் 544/KPM
அலைபேசி :
Phone : 8526 404040 , 7299076266
முழுமையான விளக்கம் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
நலவாரிய (nalavariyam online apply) அடையாள அட்டை பெற செய்ய வேண்டியது என்ன?
மேலும் இது போன்ற அரசு நல திட்ட பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யவும்
நன்றி.
Tags: நலவாரிய அட்டை பதிவு | நல வாரியம் பதிவு ஆன்லைன் | நலவாரிய அட்டையின் பயன்கள் | nala variyam card apply online | நலவாரிய அட்டை விண்ணப்பம் | tholilalar nala variyam | நலவாரிய அட்டை டவுன்லோட் | நலவாரிய அட்டை பதிவு online
| தொழிலாளர் நல வாரியம் புதுப்பித்தல்
புதிதாக நல வாரியம் இணைய
[email protected]. artist
[email protected]
[email protected]
https://www.youtube.com/watch?v=tIRPqqpWMpE&feature=youtu.be
தோழர்கள் கார் ஓட்டுநர் அமைப்புசாரா தொழிற்சங்கம்
அரசு பதிவு எண் 544/KPM
அலைபேசி :
Phone : 8526 404040 , 7299076266
Watsapp link :
Facebook link:
[email protected]
[email protected] புதிதாக நலவாரியம் இணைய
https://www.youtube.com/watch?v=tIRPqqpWMpE&feature=youtu.be
தோழர்கள் கார் ஓட்டுநர் அமைப்புசாரா தொழிற்சங்கம்
அரசு பதிவு எண் 544/KPM
அலைபேசி :
Phone : 8526 404040 , 7299076266
Samidurai
No54/sellamuthu st
Ariyalur
621704
9488451831
நான் ஏழுமையான குடும்பத்தில் பிறந்தவன் நான் கோழிகடையில் வேலை செய்கிறேன் எனக்கு நலவாரியம் அடையாளம் அட்டை வேண்டும் எனக்கு வேலைக்கு உள்ள பதிவு சான்றிதழ் கிடையாது எங்களுக்கு சங்கமும் கிடையாது என்னிடம் இருப்பது ரேஷன்கார்டு,ஆதார் கார்டு இருக்கு நான் என்ன செய்யவேண்டும்.
T N K puram
என்னுடைய பெயர் பழங்குடி மு.ராமசாமி சமூக ஆர்வலர் மற்றும் தமிழ்நாடு மலைக்குறவன் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில சங்க ஒருங்கிணைப்பாளர் எங்களுடைய ஊரப்பாக்கம் கிளை சங்கத்தில் மட்டும் சுமார் 1000குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு எந்த நலவாரிய அட்டையும் கிடையாது என்னுடைய சார்பில் இவர்களுக்கு உதவிட வேண்டும் தங்களின் உதவி கிடைக்குமா