Table of Contents
குரு பெயர்ச்சி 2020 மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பலன்கள் (Guru peyarchi 2020 – Rahu ketu peyarchi 2020 palan)
குரு பெயர்ச்சி 2020 நவம்பர் 11ம் தேதி நடக்க உள்ளது.
ராகு – கேது பெயர்ச்சி 2020 செப்டம்பர் 23ம் தேதி நடக்க உள்ளது.
மேஷ ராசி (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
குரு பெயர்ச்சி 2020 (Guru Peyarchi Palangal 2020) சார்வரி ஆண்டின் முற்பகுதியில் ஸ்ரீ குருபகவான் அவர்கள் தனுசு ராசியிலும், பிற்பகுதியில் மகர ராசியிலும், சஞ்சாரம் ஆகி ஆட்சி செய்கிறார்கள். ஸ்ரீ ராகு கேது பகவான் இந்த ஆண்டின் முற்பகுதியில் அதாவது ஆவணி மாதம் முதல் ரிஷப ராசிக்கும், விருச்சிக ராசிக்கும், மாறி சஞ்சாரம் செய்ய இருக்கிறார்கள். ஸ்ரீ சனி பகவான் இந்த ஆண்டின் முற்பகுதியில் தனுசு ராசியிலும், பிற்பகுதியில் மார்கழி மாதம் முதல் மகர ராசியில், சஞ்சாரம் செய்ய இருக்கிறார்கள்.
இந்த 2020 21 வருடத்தின் உடைய குரு பெயர்ச்சி 2020 மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பொருத்தவரை, மேஷ ராசி அன்பர்களுக்கு, கடுமையான உழைப்பினால் பேரும் புகழும் உயர்பதவியும் அடையக் கூடிய சூழ்நிலை உருவாகும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். ராணுவம் போலீஸ் துறையில் பணிபுரிபவர்களுக்கு வீரர்களால் பாராட்டுகளும் பதக்கங்களும் வந்துசேரும். விவசாயிகள் நல்ல மகசூலை அடைந்து லாபம் அடைவார்கள். மாணவர்கள் மிகச் சிறப்பாக படித்து தேர்ச்சி அடைவார்கள். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டும் நல்ல புகழ் செல்வம் செல்வாக்கு அடைவார்கள். இரும்பு ஜவுளி எலக்ட்ரிக்கல் இவற்றில் இருப்பவர்களுக்கு நல்ல லாபத்தை இந்த ஆண்டு பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடந்தேறும். சேமிப்பு உயரும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். கோவில் திருப்பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள்.
பரிகாரம்:
ஸ்ரீ முருகப் பெருமானை சஷ்டி அன்று வழிபட்டு வந்தால் உங்களுக்கு சகலவிதமான நன்மைகளும் ஏற்பட்டு குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
ரிஷப ராசி (கார்த்திகை 2, 3,4, ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதம்)
குரு பெயர்ச்சி 2020 (Guru Peyarchi Palangal 2020) மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பொருத்தவரை ரிஷப ராசி அன்பர்களுக்கு, இந்த ஆண்டின் முற்பகுதியில் தோல்வி அடைந்து பிற்பகுதியில் எதிர்பாராத வெற்றிகளைக் குவிப்பீர்கள். அரசு அதிகாரிகள் முற்பகுதியில் சுமாரான பலன்களையும் பிற்பகுதியில் மிகச் சிறப்பான பலன்களையும் பெறுவீர்கள். போலீஸ் ராணுவம் காவல் துறை சார்ந்தவர்களுக்கு இந்த ஆண்டின் முற்பகுதியில் உயிருக்கு ஆபத்தான செயல்கள் செய்து பிற்பகுதியில் உயர்பதவி பாராட்டு புகழ் இவற்றையெல்லாம் அடைவீர்கள். ஆண்டின் பிற்பகுதியில் விவசாயிகள் நல்ல மகசூல் பெற்று லாபம் அடைவார்கள். உங்களுடைய வருமானம் நிதிநிலைமை சேமிப்பு. உயரும் மாணவர்கள் பிற்பகுதியில் தேர்வு வருவதால் மிகச்சிறப்பாக வெற்றி பெறுவார்கள். கலைத்துறை சார்ந்தவர்கள் இந்த ஆண்டில் வெற்றியும் புகழும் உண்டாகும். இரும்பு சிமெண்ட் எலக்ட்ரானிக் பங்குச்சந்தை வியாபாரிகளுக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பாராத லாபத்தை ஈட்டுவார்கள். கணவன் மனைவி உறவு மிக சிறப்பானதாக இருக்கும். சுபநிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக வீட்டில் நடந்தேறும். சிலர் கடன்பட்டு சொத்துகளை வாங்குவார்கள்.
பரிகாரம்:
குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும் ஸ்ரீ மீனாட்சி அம்மனை வழிபட்டு வந்தால் சகல விதமான நன்மைகளையும் பெறுவீர்கள்.
மிதுன ராசி (மிருகசீரிஷம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3,ம் பாதம்)
குரு பெயர்ச்சி 2020 (Guru Peyarchi Palangal 2020) மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பொருத்தவரை மிதுன ராசி அன்பர்களுக்கு, முற்பகுதியில் மிக அமோகமான வெற்றிகளை அடைவீர்கள். அரசியல்வாதிகள் உயர் பதவி அடைவார்கள். பிற்பகுதியில் பதவியை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டி இருக்கும். அரசு அதிகாரிகளுக்கு முற்பகுதியில் பதவி உயர்வு பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிற்பகுதியில் தேவையில்லாத இடங்களுக்கு மாறுதல் பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும். போலீஸ் ராணுவம் காவல் துறை சார்ந்தவர்களுக்கு முற்பகுதியில் பரிசும் பாராட்டும் பழக்கமும் பெறுவார்கள். மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் படிப்பில் அக்கறை கொண்டு படித்தால் மட்டுமே அவருடைய இலக்கை அடைய முடியும். கலை துறை சார்ந்தவர்களுக்கு தங்களுடைய புதிய படைப்பினால் புகழும் அடைவார்கள் ஜவுளி இரும்பு சிமெண்ட் எலக்ட்ரானிக்ஸ் பங்குச்சந்தை துறை போன்றவர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். உங்களுடைய கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் உறவினர்கள் சற்று உங்களை விட்டு விலகி இருக்கும் சூழ்நிலை உருவாகும்.
பரிகாரம்:
திருப்பணிகளில் ஈடுபட்டால் மன அமைதி கிடைக்கும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வந்தால் துன்பங்கள் விலகி நன்மை உண்டாகும்.
கடக ராசி (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
குரு பெயர்ச்சி 2020 (Guru Peyarchi Palangal 2020) மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பொருத்தவரை கடக ராசி அன்பர்களுக்கும் அரசு பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். கடுமையான உழைப்பினால் பதவி உயர்வு பெறுவீர்கள். போலீஸ் ராணுவம் துறை சார்ந்தவர்களுக்கு தங்கள் வீரதீர செயல்களால் பதவி உயர்வும் பெறுவீர்கள். மாணவர்கள் நன்றாக படித்து தேர்ச்சி பெறுவீர்கள். கலை துறை சார்ந்தவர்களுக்கு புதிய அங்கீகாரமும் தனலாபமும் செல்வாக்கும் உண்டாகும். ஜவுளித் துறையில் பணிபுரிபவர்களுக்கு நல்ல லாபம் முன்னேற்றம் உண்டாகும் சிமெண்ட் எலக்ட்ரானிக்ஸ் பங்குச்சந்தை துறை உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் ஏற்படும். கணவன் மனைவி உறவு மிக சிறப்பாகவும் இனிமையானதாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் மிக ஆடம்பரமாக செய்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
பரிகாரம்:
தெய்வப் பணிகளில் தெய்வீக பயணங்கள் மேற்கொள்வீர்கள் ஸ்ரீ ஆதி பராசக்தியை வழிபட்டு வருவதன் மூலமாக நன்மைகளை பெறலாம்.
சிம்ம ராசி (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
குரு பெயர்ச்சி 2020 (Guru Peyarchi Palangal 2020) மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பொருத்தவரை சிம்ம ராசி அன்பர்களுக்கு, இந்த ஆண்டின் பெரும்பாலான காலமும் வெற்றி பெறுவார்கள் பதவி புகழ் அந்தஸ்து இவை அனைத்தும் உங்களை வந்து சேரும். அரசு அதிகாரிகள் பதவி உயர்வு அடைவீர்கள். தாங்கள் விரும்பிய இடத்திற்கு பணிமாற்றம் பெறுவீர்கள். போலீசார் அவரை சார்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான பணிக்கான பதக்கம் பாராட்டு கிடைக்கும். விவசாயிகள் நல்ல மகசூலை அடைந்து தனலாபம் உண்டாகும். புதிய விவசாய நிலங்களை வாங்குவீர்கள். மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்ச்சி அடைந்து உயர்கல்வி அடைவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய படைப்பினால் பேரும் புகழும் செல்வாக்கும் சமுதாயத்தில் அந்தஸ்து உயரும் லாபம் பெறுவீர்கள். இரும்பு சிமெண்ட் எலக்ட்ரானிக்ஸ் பங்குச்சந்தை வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் அமோகமான லாபம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நிகழ்வுகளை மிகச்சிறப்பாக ஆடம்பரமாக செய்து முடிப்பீர்கள். உடல்நலம் மிகச் சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவி உறவு இனிமையானதாக இருக்கும். நண்பர்கள் உறவினர்களால் உதவி கிடைத்து உயர்வு பெறுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.
பரிகாரம்:
தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க பெறுவீர்கள் அன்னை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பவுர்ணமி தினத்தன்று வழிபட்டு வந்தீர்கள் என்றால் வாழ்க்கையில் சகல விதமான சத்துகளையும் பெற்று மிகச்சிறப்பாக வாழ்வீர்கள்.
கன்னி ராசி (உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1,2,ம் பாதம்)
குரு பெயர்ச்சி 2020 (Guru Peyarchi Palangal 2020) மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பொருத்தவரை, கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் தங்களுடைய சுய முயற்சியினால் வெற்றி பெற இயலாது. பிறருடைய உதவியின் மூலமாகவே வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சூழ்நிலைகள் இருக்கும். அரசு அதிகாரிகள் முற்பகுதியில் சற்று சிரமமும் பிற்பகுதியில் பாராட்டும் அடைவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். கணவன் மனைவி உறவில் மிக இனிமையான சூழ்நிலைகள் உருவாகும். நண்பர்கள் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய கடன்களை எல்லாம் தீர்த்துவிட்டு புதிய கடன் வாங்குவதற்கு தயாராக, உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகச் சிறப்பாக இருக்கும். காவல் ராணுவம் போன்ற துறைகளில் வேலை செய்பவர்களுக்கு முற்பகுதியில் சில ஆபத்தான பணிகளை செய்ய வேண்டியிருக்கும். பிற்பகுதியில் நல்ல இடங்களுக்கு மாறுதல் கிடைக்கும். விவசாயிகள் நல்ல மகசூலை அடைந்து நல்ல லாபம் பெறுவார்கள். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு சில அவர்கள் உருவாவதற்கு சூழ்நிலைகள் உருவாகும். எலக்ட்ரானிக்ஸ் பங்குச்சந்தை இரும்பு சிமெண்ட் ஜவுளி போன்ற துறை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்:
ஸ்ரீ பால முருகனையும் கன்னியாகுமரி அம்மனையும் வழிபட்டு வந்தால் கஷ்டங்கள் விலகி நன்மைகள் உண்டாகும்.
துலாம் ராசி (சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
குரு பெயர்ச்சி 2020 (Guru Peyarchi Palangal 2020) மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பொருத்தவரை துலாம் ராசி அன்பர்களுக்கு, இந்த குரு பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி என்றால் மிகச் சிறப்பான வெற்றியும் புகழும் செல்வாக்கும் உருவாகும். அரசு அதிகாரிகள் விரும்பிய இடத்திற்கு பதவி உயர்வு பெறுவீர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். விவசாயிகள் அமோகமான லாபத்தை ஈட்டி புதிய விளைநிலங்களை எல்லாம் வாங்குவீர்கள். மாணவர்கள் நன்றாக படித்து சிறப்பாக தேர்ச்சி அடைவார்கள். ராணுவம் போலீஸ் துறை சார்ந்தவர்களுக்கு ஆபத்தில்லாத இடங்களுக்கு பணி மாற்றம் கிடைக்கும். கலைத்துறை சார்ந்தவர்கள் புதிய படவாய்ப்புகள் இன் மூலமாக புகழின் உச்சிக்கு செல்வார்கள், அதன்மூலமாக தன லாபமும் செல்வாக்கும் உயரும். கணவன் மனைவி உறவு மிக சிறப்பானதாக இருக்கும். உங்களுடைய வருமானம் நிதிநிலைமை சேமிப்புகள் உயரும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் உறவினர்கள் மூலமாக உதவி கிடைக்கப் பெற்று சந்தோஷம் அடைவீர்கள். சுபநிகழ்ச்சிகளை மிக பொருத்தவரை ஆடம்பரமாக செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பாக இருக்கும். குலதெய்வ அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் ஜவுளி பெயிண்ட் சிமெண்ட் எலக்ட்ரானிக் பங்குச்சந்தை வியாபாரிகளை பொறுத்தவரையில் மிக அதிகமான லாபத்தைப் பெறுவீர்கள்.
பரிகாரம்:
ஸ்ரீ மகாலட்சுமியை பௌர்ணமி தினத்தன்று வழிபட்டு வந்தால் சகல விதமான ஐஸ்வரியங்களையும் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வீர்கள்.
விருச்சிக ராசி (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
குரு பெயர்ச்சி 2020 (Guru Peyarchi Palangal 2020) மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பொருத்தவரை விருச்சிக ராசி அன்பர்களே, பொருத்தவரை எங்கும் எதிலும் வெற்றி. பதவி உயர்வு புகழ் செல்வாக்கு அனைத்தும் கிடைக்கப்பெறுவீர்கள். அரசு அதிகாரிகள் பாராட்டும் பதவி உயர்வு அடைய பெறுவீர்கள். போலீஸ் ராணுவம் கலைத் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உருவாகும். விவசாயிகள் மிகச்சிறப்பாக நல்ல மகசூலை அடைந்து லாபம் பெறுவீர்கள். கால்நடைகள் மூலமாக லாபமடைவீர்கள் பழைய கடன்களை மிக விரைவில் அடைத்து முடிப்பீர்கள். மாணவர்கள் மிகச் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைவார்கள். உயர்கல்விக்கு வாய்ப்புகள் தேடிவரும். கலைத்துறை சார்ந்தவர்கள் தங்கள் படைப்புகளில் வெற்றியை பெற்று லாபம் அடைவார்கள். ஜவுளி சிமெண்ட் இரும்பு எலக்ட்ரானிக் பங்குச்சந்தை வியாபாரிகளை பொருத்தவரை மிகச் சிறப்பான லாபம் உண்டாகும். கணவன் மனைவி உறவை பொருத்தவரையில் சற்று சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்து விலகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.
பரிகாரம்:
ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வதால் மனதிற்கு அமைதி உண்டாகும் பௌர்ணமி வழிபாடு பௌர்ணமி கிரிவலம் பல நன்மைகளை அள்ளிக் கொடுக்கும்.
தனுசு ராசி (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
குரு பெயர்ச்சி 2020 (Guru Peyarchi Palangal 2020) மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பொருத்தவரை தனுசு ராசி அன்பர்களே பொருத்தவரை, இந்த ஆண்டின் உடைய முற்பகுதியில் எல்லா முயற்சிகளிலும் சற்று தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். பிற்பகுதியில் வெற்றி உண்டாகும். கணவன் மனைவி உறவு சற்று சண்டை சச்சரவுகளுக்கு உள்ளாக நேரிடும். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய காலம். சிலர் தன்னுடைய சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்கள் அவரால் பகைமை உண்டாவதற்கு வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் உருவாகும். போலீஸ் ராணுவம் துறை சார்ந்தவர்களுக்கு கஷ்டமான பணிகளை மனதிற்குப் பிடிக்காத வேலையை செய்யக் கூடிய சூழ்நிலைகள் உருவாகும் மாணவர்கள் கவனத்துடன் படித்தால் மட்டுமே தேர்ச்சி அடைய முடியும் கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. மீறினால் அவமானம் ஏற்படுவதற்கு சூழ்நிலைகள் உருவாகும். ஜவுளி இரும்பு எலக்ட்ரானிக் பங்குச் சந்தை வியாபாரிகள் மிகுந்த அளவில் முதலீடு செய்யாமல் வரக்கூடிய வருமானத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எந்த செயலிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
பரிகாரம்:
ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாட்டை வளர்பிறை ஏகாதசியன்று கடைபிடித்து வந்தால் துன்பங்கள் விலகி நற்பலன்கள் உண்டாகும்.
மகர ராசி (உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
குரு பெயர்ச்சி 2020 (Guru Peyarchi Palangal 2020)மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பொருத்தவரை மகர ராசி அன்பர்களை பொருத்தவரையில் இந்த பெயர்ச்சி ஆனது நீங்கள் எடுக்கக்கூடிய பல விஷயங்களில் தோல்வியை சந்திக்க நேரிடலாம். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கும். தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு வீரதீர பணிகளில் ஈடுபட்டு எதிர்பாராத விதமாக காயங்கள் அடைய வாய்ப்புகள் உண்டு. விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டால் நஷ்டம் குறைய வாய்ப்புண்டு. மாணவர்களைப் பொறுத்தவரையில் மிக கவனத்துடன் படிப்பில் கவனம் வைத்து படிக்க வேண்டும். அப்போதுதான் தேர்ச்சி அடைய முடியும் கலைத்துறை சார்ந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். ஜவுளி இரும்பு சிமெண்ட் எலக்ட்ரானிக் பங்குச் சந்தை வியாபாரிகள் அதிக நஷ்டத்தை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கணவன்-மனைவி உறவை பொறுத்தவரை வாக்குவாதங்கள் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலம். சுப காரிய நிகழ்ச்சிகளை கடன்பட்டு நடத்தி பின் வருத்தப்படுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களை விட்டு விலகி இருப்பார்கள் கூட்டுத்தொழில் கூடாது. புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். சில சொத்துக்களை விற்கின்ற சூழ்நிலைகள் உருவாகும். தெய்வ வழிபாட்டின் மூலமாக மன அமைதியும், குடும்ப அமைதியும், பெறலாம்.
பரிகாரம்:
சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதன் மூலமாக துன்பங்களை போக்கி அனுபவ ஞானத்தை அடைய முடியும்.
கும்ப ராசி (அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, ,2, 3ம் பாதம்)
குரு பெயர்ச்சி 2020 (Guru Peyarchi Palangal 2020) மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பொருத்தவரை கும்ப ராசி அன்பர்களுக்கு, இந்த ஆண்டின் பெரும்பகுதி தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் செய்கின்ற புதிய முயற்சிகளில் வெற்றியும் உயர்வும் அடைவீர்கள். பதவி உயர்வு பெறுவீர்கள். அரசாங்க உதவியும் மேல் அதிகாரிகளின் பாராட்டுக்கும் பாத்திரமாவீர்கள். உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும். போலீஸ் ராணுவம் துறை சார்ந்தவர்களுக்கு தங்களுடைய சிறந்த பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். உயர்பதவியும் பதக்கங்களும் பாராட்டுகளையும் அடைவீர்கள். விவசாயிகள் கவலை அடைந்து அதிக லாபம் அடைவீர்கள். மாணவர்கள் தங்களுடைய சுய முயற்சியினால் சிறப்பாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்கல்விக்கு செல்வீர்கள். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய படைப்புகளை மிகச்சிறப்பாக செய்து அதற்கான அங்கீகாரமும் வெற்றியும் புகழும் தனலாபம் அடைவீர்கள். ஜவுளி இரும்பு சிமெண்ட் எலக்ட்ரானிக் பங்குச்சந்தை வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவிலான அமோகமான லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவீர்கள். திருமணத் தடைகள் அகன்று திருமணம் நடக்கும். கணவன் மனைவி உறவு மிக இனிமையானதாக இருக்கும். உங்களுடைய வருமானம் சேமிப்பு உயரும். பொன் பொருள் செல்வாக்கு ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பரிகாரம்:
தெய்வப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புண்ணியம் சேர்ப்பீர்கள் அமாவாசை நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலமாக நற்பலன்கள் அதிகரிக்கும்.
மீன ராசி (பூரட்டாதி 4ம் பாதம், உத்ரட்டாதி ரேவதி)
குரு பெயர்ச்சி 2020 (Guru Peyarchi Palangal 2020) மற்றும் ராகு-கேது பெயர்ச்சி 2020 பொருத்தவரை மீன ராசி அன்பர்களுக்கு, எல்லா முயற்சிகளிலும் வெற்றி மேல் வெற்றி அசாதாரண வெற்றி, புகழும், பெயரும், கௌரவம், அந்தஸ்து, பதவி உயர்வு, மேன்மை, இவை அனைத்தும் அதிகரிக்கும். அரசு அதிகாரிகள் தங்களுடைய நற் பணியின் காரணமாக பதவி உயர்வும் பாராட்டுகளும் பதக்கங்களும் பெறுவார்கள். ராணுவம் துறை சார்ந்தவர்களுக்கு சாகச பணிகளின் மூலமாக பெரிய அளவில் புகழ் அடைவார்கள். விவசாயிகள் அதிக விளைச்சல் காரணமாக நல்ல மகசூல் அடைந்து பெரிய அளவில் லாபம் அடைவார்கள். புதிய விளை நிலங்களை சொத்துகளை வாங்குவார்கள். மாணவர்கள் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் மூலம் தேர்ச்சி பெறுவார்கள் உயர்கல்விக்கு வெளிநாடு செல்லும் யோகம் உருவாக்கும். கலை துறை சார்ந்தவர்களுக்கு தங்களின் புதிய யுக்தி புதிய படைப்புகள் மூலம் பேரும் புகழும் செல்வாக்கும் தனலாபம் உண்டாகும். ஜவுளி பெயிண்ட் சிமெண்ட் இரும்பு எலக்ட்ரானிக்ஸ் பங்குச்சந்தை வியாபாரிகளுக்கு மிக அபரிமிதமான லாபத்தை பெறுவார்கள். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் விலகி உங்கள் உறவு மிக இளிமையானதாக இருக்கும். பெற்ற பிள்ளைகள் மூலமாகவும் சகோதர சகோதரிகளின் மூலமாகவும் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல்நலத்தைப் பொறுத்தவரை மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுடைய வருமானம் சேமிப்பு இவை அனைத்தும் உயரும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய வண்டி, வாகனம், நிலம், வீடு, சொத்துக்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உறவினர்களின் உதவியால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
பரிகாரம்:
தெய்வ பயணங்களில் ஆன்மீக பணிகளில் ஈடுபடுவதன் மூலமாக மன அமைதியும் நிறைவும் உண்டாகும். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட்டு வருவதன் மூலமாக சகல சௌபாக்கியங்களையும் பெற்று நிறைவாக வாழ்வீர்கள்.
வெற்றி புகழ் செல்வம் பெற
ஆகிய பதிவுகளையும் பாருங்கள்.
மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்கள் Facebook, Twitter, உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.