Best Job For Your Rasi And Your Life Partner

Best Job For Your Rasi And Your Life Partner

உங்களுக்கு வருகின்ற வாழ்க்கைத்துணை என்ன வேலை செய்தால் வெற்றியின் உச்சத்தை தொடுவார்

Best Job For Your Rasi And Your Life Partner

எல்லா பெண்களுமே தனக்கு வரக்கூடிய கணவர் என்ன தொழில் செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பார்கள், இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் ஆண்களும் தங்களுக்கு வருகின்ற மனைவி வேலை செய்கிற மனைவியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆண் பெண் இருவருமே திருமண பேச்சை ஆரம்பித்தவுடன் முதல் எண்ணம் இதுவாகத்தான் இருக்கும். என் கணவர் என்ன தொழில் செய்கிறார் ஜாதகரீதியாக நாம் பாவத்தை வைத்து வரக்கூடிய கணவரோ மனைவியோ என்ன தொழில் செய்வார்கள் என்று ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். 4ம் அதிபதி பலம் பெற்று இருந்தால் நாம் சொல்லக்கூடிய வேலைகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள் அதுவே பலம் குறைந்து காணப்பட்டால் ஒரு சராசரி சம்பாத்தியம் இருக்கும்.
12 ராசிகளுக்கும் வாழ்க்கைத்துணை என்ன வேலை(Best Job For Your Rasi And Your Life Partner) செய்யலாம் என்று பார்ப்போம்.

மேஷம்

இவர்களுடைய வாழ்க்கை துணை நீர் சம்பந்தமான தொழில், பெட்ரோல் சம்பந்தமான தொழில், ஹோட்டல் சம்பந்தமான தொழில், கப்பல் தொழில், மின் சம்பந்தமான தொழில், கடல் ஆராய்ச்சி, குழாய்க்கிணறு கூடிய தொழில், பால், காய்கறிகள் சம்பந்தமான தொழில், போலீஸ், ராணுவம், பாதுகாப்பு வாகனம் ஓட்டுதல், சுற்றுலா, துணி வியாபாரம், உப்பு போன்ற தொழில்கள். மேஷ ராசிக்கு சந்திரன் பலமாக இருந்தால் இந்தத் தொழிலில் மேன்மையான புகழ் செல்வாக்கோடு பணிபுரிவார்கள் சந்திரன் பலம் குன்றி இருந்தால் குறிப்பிட்ட தொழில்களில் சுமாரான வேலை கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு, சூரியன் பலமாக இருந்தால் அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மருத்துவம் துறை சார்ந்த தொழில்கள், தன்னுடைய தாய் தந்தையர் மூதாதையர் உடைய பரம்பரை தொழில்கள், வனத் துறையில் வேலை செய்வது, இயக்குனர், கவுன்சிலர், ஷேர் ப்ரோக்கர், கொள்கலன்கள் உபகரணங்கள் விற்பனை போன்ற தொழில்களை செய்வார்கள். சூரியன் பலத்தைப் பொறுத்து பணியில் ஏற்ற இறக்கம் இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய வேலையில் கண்டிப்புடன் இருப்பார்கள். சிலருக்கு ஒரே இடத்தில் இருந்து வேலை செய்யக்கூடிய அமைப்பு ஏற்படலாம்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு பேராசிரியர், ஆசிரியர், கணக்கர்கள், ஜோதிடர், அச்சு சம்பந்தமான தொழில்கள், மொழிபெயர்ப்பாளர்கள், புரோகிதர், புரோக்கர், வணிகர், நூல் வெளியீட்டாளர், ஆடிட்டர்கள் போன்ற தொழிலில் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் அலைந்து திரிந்து வேலை செய்ய விரும்புபவராக இருப்பார்கள். புதன் நன்கு பலம் பெற்று இருந்தால் இந்தத் தொழிலில் அவர்கள் உச்சத்தை அடைவார்கள்.

கடகம்

இவர்கள் ஆபரணங்கள், பட்டு, வெள்ளி, ஓவியம், இசை சம்பந்தப்பட்ட தொழில், வரவேற்பாளர், பாடகர்கள், ரசாயன பரிசோதகர்கள், ஜாம், ஊறுகாய் உற்பத்தியாளர்கள், போக்குவரத்து ஏஜென்டுகள், கட்டிட காண்ட்ராக்டர்கள் இந்தத் துறை சார்ந்த தொழில்கள் அமையும். சுக்கிரனை பொறுத்து தொழிலில் மேன்மை ஏற்படும் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் இந்த துறையில் அவர்கள் உச்சத்தில் இருப்பார்கள். இவர்கள் ஓயாமல் அலைந்து கொண்டே பணிபுரியும் நிலைமை இருக்கும்.

சிம்மம்

ஆய்வாளர்கள், ராணுவம் சம்பந்தப்பட்ட தொழில்கள், அறுவை சிகிச்சை மருத்துவர், பல் மருத்துவர், கப்பல் தொழில்கள், அணைகட்டும் தொழில்கள், நீர் விநியோக பணியாளர்கள் போன்ற வேலைகளைச் செய்வார்கள். மேலும் தோல் பதனிடும் இடத்தில், இரும்பு கிடங்கு போன்ற இருட்டுப்பள்ளம் நிறைந்த இடங்களிலும் இவர்கள் தொழில் புரிய வாய்ப்புள்ளது. செவ்வாயின் பலத்தை பொறுத்து வேளையில் மேன்மையும் உயர்வும் அடைவார்கள் Best Job For Your Rasi And Your Life Partner – Simma Rasi.

கன்னி

ஆசிரியர்கள் நீதிபதிகள் பேச்சாளர்கள் அரசியல்வாதிகள் விளம்பரத் தொழில் செய்பவர்கள் பொருட்களை சேகரிப்பவர்கள் கட்டிடத் தொழில் போக்குவரத்து தொழில் மருத்துவம் சம்பந்தமான தொழில்கள் பள்ளி கல்லூரி தேவலயங்கள் போன்ற இடங்களில் வேலை செய்வார்கள் குருவினுடைய பலத்தைப் பொறுத்து பணியில் உயர்வும் தாழ்வும் அமையும் பணியில் கண்டிப்பாக கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள்.

துலாம்

துப்பறியும் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள், பழைய பொருட்களை சேகரிப்பவர்கள், வேளாண்மைத் தொழில் பாலம் கட்டும் தொழில், மருத்துவர்கள், நெருக்கமான இருட்டான இடத்தில் பணிபுரிபவர்கள், பழமையான கட்டடத்தில் பணிபுரிபவர்கள் சனியின் பலத்தைப் பொறுத்து அவர்களது தொழிலில் மேன்மையும் உயர்வும் அமையும். மிகவும் தேவையான பணி நேரத்தில் மட்டுமே அலைச்சல்களை மேற்கொள்வார்கள்.

விருச்சிகம்

அறிவியல் அறிஞர்கள், சுரங்கப் பொருட்கள் சம்பந்தமான வேலை, தோல் நோய் மருத்துவர், ரசாயனம், மெக்கானிக்கல் இன்ஜினியர், மின்சாரம் சம்பந்தமான அனைத்து தொழில்கள், ஏற்றுமதியாளர்கள், வண்ணம் சம்பந்தமான தொழில் இந்தத் துறைகளில் பணிபுரிவார்கள் பலத்தைக் கொண்டு அவர்களுடைய தொழிலில் உயர்வு தாழ்வும் அமையும். இவர்கள் அமைதியாக இருப்பது போல் தோன்றினாலும் உள்ளுக்குள் எப்பொழுதும் படபடப்பாக பணிபுரிபவர்கள்.

தனுசு

அரசியல்வாதிகள், அமைச்சர்கள், பேராசிரியர்கள், சினிமா நடிகர்கள், அது சம்பந்தமான தொழில்கள், மருந்து, எண்ணெய், வாசனை திரவியங்கள், மீன் கண்காட்சி, துறைமுகத் தொழிலாளர்கள், கைரேகை, எண்கணிதம், வல்லுனர்கள், கப்பல் வேலை, சாது, சந்நியாசி, என்று வாழ்க்கை நிலை அவர்களுக்கு அமையும் பொதுவாக இவர்கள் சூழ்ந்த இடங்களில் பணிபுரிவார்கள் அல்லது பதனிடும் இடங்களில் பணிபுரிவார்கள் குருவின் பலத்தைக் கொண்டு அவர்களின் வாழ்க்கையில் உச்சத்தை அடைவார்கள்.

மகரம்

போலீஸ் துறையில் வேலை செய்பவர்கள், ரயில்வே வேலை, விளையாட்டு சம்பந்தமான பொருட்கள் விற்பனை, சமையல்கலை, குத்துச்சண்டை வீரர், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர், ராணுவத்தில் வேலை, கடிகாரம் சம்பந்தமான வேலை, தீப்பெட்டி, பட்டாசு சம்பந்தமான தொழில்கள், பெரிய வாகனங்கள் சம்பந்தமான தொழில்கள், செவ்வாயின் பலத்தை பொறுத்து தொழிலில் உயர்வு தாழ்வு அமையும். இவர்கள் பொதுவாக வெப்பமான இடத்தில் தொழில் புரிவார்கள் தொழிலில் கடுமையாக நடந்து கொள்வார்கள்.

கும்பம்

தோட்டம் சம்பந்தமான தொழில்கள், பேங்க் வேலைகள், விவசாயம் சம்பந்தமான வேலைகள், டிரைவர்கள் ,சினிமாவில் வேலை செய்பவர்கள், ஓவியம் வரைபவர்கள், பூக்கடை வைத்திருப்பவர்கள், கண்ணாடி, பிளாஸ்டிக், பட்டு, பருத்தி, பால், ஐஸ்கிரீம், காய்கறி, பெட்ரோல், அரிசி விற்பனை போன்ற தொழில்களை செய்வார்கள். இந்த ராசி பெண்கள் பெரும்பாலும் பெண்கள் சம்பந்தமான ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், அதில் வெற்றியும் பெறுவார்கள். பணியில் உறுதியான மனப்பான்மை கொண்டவராக இருப்பார்கள். குருவின் பலம் முக்கியமாக இருப்பதினால் அது வாழ்க்கையில் உயர்வைத் தரும்.

மீனம்

பத்திரிக்கை நடத்துவது, பத்திரிக்கை ஆசிரியர்கள், தூதரக அலுவலகங்கள், தபால்காரர்கள், விற்பனையாளர்கள், புகைப்பட கலைஞர்கள், பேருந்து தொழிலாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர், வழக்கறிஞர்கள், காரியதரிசி, கண்ணாடித் தொழிற்சாலை, பச்சை நிறம் கொண்ட பொருட்கள், ரயில்வே வேலை போன்ற தொழில்களைச் செய்பவர்களாக இருப்பார்கள். புதனுடைய பலத்தைப் பொறுத்து இவர்கள் வாழ்க்கையில் உயர்வு இருக்கும். இவர்கள் எப்பொழுதும் அலைந்து திரிந்து கொண்டே பணி புரிவார்கள்.
பெண்களின் ஜாதகத்தை கொண்டு பலன் காணும் போது அவர்கள் கணவரின் வேலைக்குரிய கிரகங்கள் பலமிழந்து இருந்தால் அந்த குறிப்பிட்ட கிரகத்திற்குரிய பரிகாரம் செய்தால் வேலையில் நிறைவும் பணவரவும் கிடைக்கும்.
ஆண் பெண் இருபாலரும் சம்பந்தப்பட்ட கிரகம் 9-ஆம் இடம் 12-ஆம் இடம் சம்பந்தப்பட்ட சர ராசிகள் சம்பந்தப்பட்ட வெளியூர் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும்.

Best Job For Your Rasi And Your Life Partner Video

 
Guru Peyarchi Palangal 2020

Rahu ketu peyarchi palangal 2020

ஆகிய பதிவுகளையும் பாருங்கள்.

மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்களில் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

 

Leave a Reply

Your email address will not be published.