Table of Contents
அஷ்டமி பைரவர் வழிபாடு
1. கால பைரவர்(Swarna Kala bhairavar)
கண்திருஷ்ட்டி, போட்டி, பொறாமை, எதிர்கள், துஷ்ட சக்தி, பில்லி, சூன்யம், ஏவல், அழித்து, தன்னம்பிக்கை, தைரியம், பாதுகாப்பு, அரண்ணாக இருப்பவர் கால பைரவர்.
2. தீர்த்த பைரவர்(Theertha bhairavar)
சகல விதமான எந்த தோஷ்ங்களாக இருந்தாலும் பல பிறவிகளில் செய்த பாவங்களை போக்க கூடியவர் தீர்த்த பைரவர்.
3. சொர்ணாகர்ஷன பைரவர்(swarna bhairavar)
தனம், செல்வம், பணம், செல்வாக்கு, அதிகாரம் சகல சம்பத்துகளையும் சகல யோகம், அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம் அளிப்பவர் சொர்ணாகர்ஷன பைரவர்.
Swarna Bhairavar Temple
மூன்று பைரவர் ஒரே இடத்தில் இருக்கும் தெய்வீக சக்தி நிறைந்த இடம் - வாழவைத்த அம்மன் திருக்கோவில் வடமலபுரம் - இராஜபாளையம்
தேய்பிறை அஷ்டமி பைரவர்( Ashtami Bhairavar )
அனைத்து சிவன் ஆலயங்களிலும் நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். ஸ்ரீ பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி யில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்லருள் கிட்டும். இலுப்பை எண்ணை, விளக்கெண்ணை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.
அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிடம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் உண்டாகும்.
இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வழிபட்டால் மிகுந்த பலன்களை வாரி வழங்குவார் என்பது ஐதீகம். மேலும் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும். எதிர்ப்புகளை விலக்கும்.
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். நமக்கு செல்வ வளங்களை வழங்குவதற்கும், நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழ வைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.
பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி யை திரியம்பகாஷ்டமி என்று கூறுவர். இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
அஷ்டமி திதி காலங்களில் சுப காரியங்களான கல்யாணம், புதுமனை புகு விழா, புதிய சொத்துக்கள் வாங்குவது மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, நமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை.
தேய்பிறை அஷ்டமி திதியில் மகாதேவர் என்கிற சிவபெருமான் பைரவர் அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று ஆயுளையும், அழிவில்லா பொருளையும், ஆன்ம சாந்தியையும் தரும் சனிதேவர் பணிந்தார்.
ஸ்ரீபைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி யில் Ashtami Bhairavar க்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், தொழிலில் வளர்ச்சி காணவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமி யன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை( Ashtami Bhairavar )ஏன் வணங்க வேண்டும்?
தேய்பிறை அஷ்டமி யில் பைரவரை ஏன் வணங்க வேண்டும் என்றால், அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்றுதான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.
நாமும் அதுபோல் தேய்பிறை அஷ்டமி யன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களின் பாவ வினைகள் தீரத் துவங்கும். அப்படி பாவ வினைகள் தீரத் துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.
ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால் அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.
அதனால் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைக்கும்.
தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
பரணி நட்சத்திரம் வரக்கூடிய நாள் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகமாக கிடைக்கும்.
பைரவர் வழிபாட்டில் சிறந்தது சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு. இந்த வழிபாடு செய்வதற்கு தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகும். குழந்தை இல்லாமல் வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி நாட்களில் செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
( Ashtami Bhairavar )பலன்கள் :
வர வேண்டிய பணம் வந்துவிடும்.
தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.
சனியின் தாக்கம் தீரும்.
வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
தேய்பிறை அஷ்டமி நாட்கள் 2021
வளர்பிறை அஷ்டமி (Swarna bhairavar Ashtami Bhairavar)பைரவர் வழிபாடு
எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் அந்த பைரவரை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது. அதில், பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் செல்வம் பெருகும் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும். சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார். வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெருமானை வழிபடலாம். நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும், அதனால், இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும்.
வளர்பிறை, தேய்பிறையில் செய்ய வேண்டியவை..! செய்யக்கூடாதவை..!
வளர்பிறை, தேய்பிறை என்பது ஒவ்வொரு மாதமும் வருகிறது. அதுமட்டுமின்றி வளர்பிறைக்கு மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர். வளர்பிறையில் என்ன செய்ய வேண்டும். தேய்பிறையில் என்ன செய்யக் கூடாது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
வளர்பிறை :
சுக்ல பக்ஷம் என்றால் வளர்பிறை காலம். அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியிலிருந்து பௌர்ணமி நாள் வரை வருகின்ற 15 நாட்களை சுக்ல பக்ஷம் அதாவது வளர்பிறை காலம் என்று அழைக்கிறோம்.
வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும்.
வளர்பிறையை திருமணம், கிரகப் பிரவேசம் செய்ய தேர்ந்தெடுக்கிறார்கள்.
வளர்பிறை போல வளர்ந்து, கணவன்-மனைவி இருவரும் 16 செல்வங்களுடன் வாழ வேண்டும் என்பதற்காகச் செய்கிறார்கள்.
கிரகப் பிரவேசம் செய்யும் போதும் வளர்பிறையைப் பார்ப்பது ஏனென்றால், குடிபுகும் வீட்டில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகத் தான்.
குழந்தைகளை கல்விக் கூடத்தில் சேர்ப்பது, வியாபாரம் தொடங்குவது, வீடுகட்டத் தொடங்குவது போன்ற முக்கியமான செயல்களுக்கு வளர்பிறைதான் முக்கியம்.
வளர்பிறை திரியோதசியில் பிரதோஷ வழிபாட்டிற்கு பூஜை சாமான்கள் வாங்கி கொடுப்பது, பிரதோஷ வேலை முழுதும் கர்ப்ப கிரகம் அருகில் அமர்ந்தபடி சிவ தியானம் செய்து வருவது பாவங்களை போக்கும்.
சண்டை சச்சரவுகளில் இருந்து இந்நாளில் ஒதுங்கி இருப்பது நலம் தரும்.
வளர்பிறை அஷ்டமி நாட்கள் 2021
தேய்பிறை :
கிருஷ்ண பக்ஷம் என்றால் தேய்பிறை காலம். பௌர்ணமிக்கு அடுத்த நாள் வரும் பிரதமையிலிருந்து அமாவாசை வரை வருகின்ற 15 நாட்களை கிருஷ்ண பக்ஷம், அதாவது, தேய்பிறை காலம் என்று அழைக்கிறோம்.
தேய்பிறை என்பது தேயவேண்டும். அதாவது நோய் விலக வேண்டும், தீர வேண்டும். அதற்காகத்தான் தேய்பிறை.
கடன் வாங்குவது, கடன் அடைப்பதற்கு தேய்பிறை நல்லது. விவாதங்களில் ரூடவ்டுபட்டு வெற்றி பெறவும் தேய்பிறை நல்லது.
தேய்பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு.
நாள் நட்சத்திரம் பார்த்து நல்ல காரியம் செய்யும்பொழுது அவற்றின் தலைவனாகிய சந்திரன் வளர்பிறையாக அதாவது பலமுள்ளவனாக இருக்க வேண்டும். அதனால் தான் தேய்பிறையில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்கிறார்கள்.
மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்களில் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.