Arcot Panchangam | ஆற்காடு பஞ்சாங்கம்

 

Arcot Panchangam 2022-2023

பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்சாங்கம் என்பது வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்.

Arcot Panchangam 2022 – 2023

அவை :

  1. வாரம் 2. நட்சத்திரம் 3. திதி 4. யோகம் 5. கரணம்

வாரம் : ஞாயிறு முதல் சனி வரையான கிழமைகள் 7-யை குறிக்கும்.

நட்சத்திரம் : அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்.

திதி : ஒரு வானியல் கணக்கீடாகும். வானில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.

யோகம் : வானில், குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.

கரணம் : திதியில் பாதியாகும்.

பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன.

  1. சௌரமான முறை
    2. சந்திரமான முறை.

சௌரமான முறை

இம்முறை சூரியனின் இயக்கத்தை அடைப்படையாக கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. அவை : 1 சௌர வருஷ முறை 2 சாயன வருஷ முறை

சந்திரமான முறை

சந்திரனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஒரு வருடம் என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது.

பஞ்சாங்க வகைகள்

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிடம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும்.

1.திருக்கணித பஞ்சாங்கம்

சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது.

2.வாக்கிய பஞ்சாங்கம்

வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும். தமிழ் நாட்டில் வாக்கிய பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.

வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் வேறுபாடு..!!

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன.

1.வாக்கிய பஞ்சாங்கம்.

2.திருக்கணித பஞ்சாங்கம்.

வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 6 மணி 48 நிமிடம் வரை வேறுபாடு ஏற்படும்.

அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும்.

வாக்கிய பஞ்சாங்கம் :

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த ரிஷpகள் ஒன்றுக்கூடி தங்களுக்குள் இருக்கும் கருத்துக்களை பரிமாறி இயற்றிய ஸ்லோகங்களில் உள்ள கணிதமுறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் இன்றளவும் எழுதப்படுவது வாக்கிய பஞ்சாங்கமாகும்.

காலமாற்றத்தினால் எவ்விதமான மாற்றத்திற்கும் உட்படாத, அதாவது திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. நம் முன்னோர்களின் கருத்துக்களையும் அவர்கள் பின்பற்றிய கணிதமுறைகளை இன்றளவில் எள்ளளவும் மாற்றாமல் பழமையை பிரதிபலிக்கும் பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கமாகும்.

தமிழ்நாட்டில் உள்ள திருத்தலங்களில் இறைவழிபாடுகள் யாவும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பின்பற்றப்படுகின்றன.

தமிழ்நாட்டில் வெளிவரும் வாக்கிய பஞ்சாங்கங்களான

ஆற்காடு ஸ்ரீசீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்| Arcot Panchangam 2021-2022

அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கம்

மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம்

திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கம்

ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம் முதலியவையாகும்.

நமது நித்ரா நாட்காட்டியின் முதல் பக்கத்தில் உள்ள நாட்காட்டி பகுதி வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
திருக்கணித பஞ்சாங்கம் :

18ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தொலைநோக்கி உதவியின் மூலம் கிரகநிலைகளையும், சந்திரனது சுழற்சி பாதையில் ஏற்படும் சிறு சிறு வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்பட்ட பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கமாகும். சந்திரனுக்கு ரூடவ்ர்ப்பு விசை குறைவு என்பதால் மற்ற கிரகங்களின் ரூடவ்ர்ப்பு விசைக்கு ஆட்படுவதால் சந்திரனின் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு.

லகரி அயனாம்சத்தை அடிப்படையாக கொண்டு பின்பற்றப்படும் மற்றும் கணிதமுறைகளில் சில மாற்றங்களை திருத்தி செய்து வெளியிடப்படும் பஞ்சாங்கம் திருத்தப்பட்ட கணிதம் அல்லது திருக்கணித பஞ்சாங்கம் ஆகும்.

பெரும்பாலான ஜோதிடர்களால் திருக்கணித பஞ்சாங்கத்தின் மூலம் ஜாதகம் கணிக்க மற்றும் ஜாதக பலன் உரைக்க பயன்படுத்தப்படுகின்றது.

தமிழ் நாட்டில் வெளிவரும் திருக்கணித பஞ்சாங்கங்களான

ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம்

வாசன் சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம்

குமரன் திருக்கணித பஞ்சாங்கம்

ராஷ்ட்ரீய பஞ்சாங்கம்

பாலன் திருக்கணித பஞ்சாங்கம்

சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம் முதலியவையாகும்.

60 அறுபது தழில் வருடங்கள்(Arcot Panchangam 2021-2022)

  1. பிரபவ வருடம்
    2. விபவ வருடம்
    3. சுக்கில வருடம்
    4. பிரமோதூத வருடம்
    5. பிரசோற்பத்தி வருடம்
    6. ஆங்கீரச வருடம்
    7. ஸ்ரீமுக வருடம்
    8. பவ வருடம்
    9. யுவ வருடம்
    10. தாது வருடம்
    11. ஈசுர வருடம்
    12. வெகுதானிய வருடம்
    13. பிரமாதி வருடம்
    14. விக்கிரம வருடம்
    15. விஷு வருடம்
    16. சித்திரபானு வருடம்
    17. சுபானு வருடம்
    18. தாரண வருடம்
    19. பாரத்திப வருடம்
    20. விய வருடம்
    21. சர்வசித்து வருடம்
    22. சர்வதாரி வருடம்
    23. விரோதி வருடம்
    24. விகிர்த்தி வருடம்
    25. கர வருடம்
    26. நந்தன வருடம்
    27. விஜய வருடம்
    28. ஜய வருடம்
    29. மன்மத வருடம்
    30. துர்முகி வருடம்
    31. ஏவிளம்பி வருடம்
    32. விளம்பி வருடம்
    33. விகாரி வருடம்
    34. சார்வாரி வருடம்
    35. பிலவ வருடம்
    36. சுபகிருது வருடம்
    37. சோபகிருது வருடம்
    38. குரோதி வருடம்
    39. விசுவாவசு வருடம்
    40. பராபவ வருடம்
    41. சுபகிருதுங்க வருடம்
    42. கீலக வருடம்
    43. சௌமிய வருடம்
    44. சாதாரண வருடம்
    45. விரோதிகிருது வருடம்
    46. பரிதாபி வருடம்
    47. பிரமாதீச வருடம்
    48. ஆனந்த வருடம்
    49. இராட்சத வருடம்
    50. நள வருடம்
    51. பிங்கள வருடம்
    52. காலயுத்தி வருடம்
    53. சித்தார்த்தி வருடம்
    54. ரௌத்திரி வருடம்
    55. துர்மதி வருடம்
    56. துந்துபி வருடம்
    57. ருதிரோற்காரி வருடம்
    58. இரத்தாட்சி வருடம்
    59. குரோதன வருடம்
    60. அட்சய வருடம்,

Arcot Seetharamaiyer Tamil Panchangam pdf download

Arcot Panchangam 2022-2023 | ஆற்காடு பஞ்சாங்கம் (Subakiruthu Varudam) சுபகிருது வருட பலன்கள்

 

Arcot Panchangam 2021-2022 Subakiruthu Varuda Rasi Palangal

 

ஆகிய பதிவுகளையும் பாருங்கள்.

மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்கள் FacebookTwitter, உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *