Abhijit Muhurtham Magic | அபிஜித் முகூர்த்தம்

Abhijit Muhurtham

அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?

What is Abhijit Muhurtham?

 

கலியுகத்தில் மனிதர்களுக்காக நல்ல காலங்களைக் கண்டு அறிந்து நற்பலன்களைக் கண்டிட மொத்தம் 28 நட்சத்திரங்கள் இருந்தன என்பதை யாரேனும் அறிந்திருக்கிறீர்களா? அஸ்வதி முதல் ரேவதி வரை மட்டுமே நம் பயன்பாட்டில் இருப்பவை தெரியும்.
ஆனால் முதல் நட்சத்திரமாகச் சொல்லப்பட்டது அபிஜித் நட்சத்திரம் ஜீலியன் காலண்டர் குறிப்புகளிலேயே அபிஜித் என்ற நட்சத்திரம் முகூர்த்த காலமாக மாற்றப்பட்டு அங்கங்கே இடக்குறிகளாக எழுதப்பட்டிருந்தன.

கடவுள் வழிபாட்டுக்கும், சுபநிகழ்ச்சிகளுக்கும் தினமும் காலை வேளையில் திதி- வாரம்- நட்சத்திரம்-யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கணக்கிட்டு பஞ்சாங்கக் குறிப்புகளுடன் முகூர்த்த நேரங்கள் சொல்லப்பட்டன.

வெற்றி-புகழ்-செல்வம்-தைரியம் தரும் அபிஜித் முகூர்த்தம்

(Abhijit Muhurtham)

வெற்றி அடைய விரும்பும் அனைவரும் இந்த அபிஜித் முகூர்த்த காலத்தைப் பயன்படுத்தலாம். தொழிற்கூடத்தை நிறுவி வியாபார ஏற்ற இறக்கத்தாலும் தேதிகளின் தொந்தரவாலும் இழந்தவைகளைப் பெற்றிட இந்தநேரமானது உன்னதமான காலம் என்று சொல்லலாம்.

அபிஜித் நேரம் என்பது என்னப நட்சத்திரக் கூட்டத்தின் முன்பாக முதல் நட்சத்திரமாக நின்றபோது இதற்கு சக்தி அதிகமாக இருக்கவில்லை. இது தனியே பிரிந்து வெற்றிக்கான நேரம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு ஜோதிடர்களும் ஆன்மீக அருளாளர்களும் இந்த காலத்தைத் தவறாமல் பயன்படுத்தி தங்கள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ளவே வழக்கக் சொல்லில் உச்சி வேளை என்று வந்து விட்டது.

ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள நேரமே அபிஜித் நேரம். பிரம்ம முகூர்த்தம் எப்படி நிர்மலான நேரம் எனப்பட்டதோ அதே போல் அபிஜித் காலமும் வெற்றிக்கான பூஜைகள் செய்திடும் காலம் ஆகும். ஜித்-என்றால் ஜெயித்தல், அபிஜித் என்றால் மிகச் சிறப்போடு வெற்றி பெறுதல் எனப்படும்.
அதாவது வழிபட்டால் வெற்றி கிட்டும் காலம். காலையில் சூரிய உதய காலத்திலிருந்து ஆறுமணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் இக்காலம் உத்திராடம் மூன்று நான்காம் பாதங்கள், திருவோணம், 1, 2-ம் பாதகங்கள் வருகின்ற ஒரு கால கட்டத்திலேதான் நான்முகனாகிய பிரம்மதேவன் பூமியையும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெற்றி பெற்று அடைந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

பரமேஸ்வரன் இந்த அபிஜித் நேரத்தில்தான் முப்புரங்களையும் வென்று எதிகளைத் தோற்கடித்து ஓடச் செய்தார். இறைவனுக்கே சோதனைகள் வந்தபோது இக்காலத்தைப் பயன்படுத்தினார். மனிதர்களாகிய நாமும் நம்முடைய தேவைகளை இறைவனிடம் கோரிக்கையாக வைத்து எந்த கடவுளை வழிபடப் போகிறோமோ அதன் முக்கிய மூலத்தை அறிந்து கொண்டு இக்காலத்தில் வழிபட அவர்களும் நண்பர்களாகி விடுவர்.
அபிஜித் உருவம் என்ன? – 27 நட்சத்திரங்களுக்கும் உருவம் உள்ளதைப் போல இதற்கும் ஓர் வடிவம் இருக்கிறது. நான்கு தெருக்கள் சந்திக்கின்ற நாற்சந்தியே இதன் வடிவமாக உள்ளது. இதன் பொருள் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்களாகிய வாழ்வியல் தர்மத்தின் வழியே நாம் சென்று கொண்டிருந்தால் பார்போற்றும் நட்சத்திரங்களைப் போன்று வாழலாம் என்பதே இதன் ரகசியச் சொல் குறியீடு ஆகும்.

இதைத் தான் மனிதன் நான்கையும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். இதன் உருவ அமைப்பில் முதல் பகுதி – ஜ, புகழைக் குறிக்கிறது. இரண்டாம் பகுதி- ஜி வெற்றியைக் குறிக்கிறது. மூன்றாம் பகுதி -ஜீ. இறையருளைக் குறிப்பது. 4-ம் பகுதி-ஐ-ஐஸ்வர்யத்தைச் சொல்கிறது.

நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு கிழமைகளிலும் இதற்கு ஒரு சக்தி பிறந்து கொண்டே இருக்கிறது என்று வான சாஸ்திரிகள் கருத்து கூறுகின்றனர். உத்திராடம், திருவோண நட்சத்திர நாட்களில் மட்டும் கிழக்கு வானத்தில் அதிகாலையில் ஒரு கேள்விக்குறி போன்ற சிறு நட்சத்திரக் கூட்டம் தெரியும்.

இதன் தலை பாகத்தில் தனியாக அபிஜித் தெரியும் என்றும் இதை காண போதிய பயிற்சி தேவை என்றும் வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிறப்பான இந்த அபிஜித் நட்சத்திரத்தைக் கண்டு விட்டால், எல்லா செயல்களுமே வெற்றியாக முடியும். நமக்குக் குறிப்பிட்ட பணிகளில் தடை இருந்தால் அவை விலக அபிஜித் முகூர்த்த கால பூஜைகள் வெற்றி பெற சமய சஞ்சீவனமாக உள்ளன.

இந்த காலத்தில் சாதாரண மங்கள மந்திரங்களும், அஸ்திர மந்திரங்களும் இரட்டிப்பான பலன்களைத் தருகின்றன என்று பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள். அபிஜித் காலத்தில் வெற்றி தரும் வழிபாடுகள்- இக்கால கட்டத்தில் திருமண நிச்சயதார்த்தங்கள் அதிகம் எழுப்பபட்டு அவை மணமுறிவுகளாக ஆறு மாதங்களில் ஆகி விடுகின்றன.

அதற்கு மறு மாங்கல்ய பூஜை செய்து திருமணப் பதிகம் ஓதி உமை ஒருபாகனை வழிபட்டால் அடுத்து அமையும் திருமணம் நல்லபடியாக நடந்து வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். துணி நீல வண்ணம் முகில் தோன்றியன்ன மணி நீல கண்டனம் உடையாய் மருகல் அகணி நீலவண்டார் குழுவாள் சிவந்தன் அணி நீலஒண்கண் அயர்வாக்கினயே என்று சிவன் முன் கூறுக.

நம்மை படைத்த இறைவனுக்கே சில புராணங்களில் அபிஜித் நேரத்தில் வெற்றி தந்ததாக வரலாறுகள் உள்ளன. ரிஷிகளும், முனிகளும் மட்டுமன்றி, தேவர்களும், தெய்வங்களும் கூட இந்த நேரத்தை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். அவர்களால் படைக்கப்பட்ட மனிதர்களும் அபிஜித் நேரத்தை சரியாக பயன்படுத்தி அனைத்திலும் வெற்றி காணலாம்

Abhijit Muhurtham Time 2021 – 2022

Abhijit Muhurtham Time 2021

Abhijit Muhurtham Mantra

இழந்த பொருள் மீட்க- நிலம், வீடு சொந்தங்கள், இழப்பு நண்பர்கள் எதிரிகளால் பொருள் இழப்பு ஏற்பட்டால் `எம் நமக் கார்த்த வீர்யாய ஹீம்பட்’ என்ற மூல மந்திரத்தை ஒரு வட்டமிட்டு எழுதி தீபம் ஏற்றி
ஓம் கார்த்த வீர்யா போற்றி!
ஓம் இழந்ததை மீட்பாய் போற்றி!
ஓம் பராக்கிரம சாலியே போற்றி!
ஓம் இரக்க குணம் உடையோய் போற்றி!
ஓம் சக்கர வாசனே போற்றி
என்று கூறி வழிபடுக.

ஜோதிடம் ஆன்மீகம் சார்ந்த வீடியோகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்..மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்களில் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

 

Tags: abhijit muhurtham in tamil
abhijit muhurtham means
abhijit muhurtham time
abhijit muhurtham for marriage
abhijit muhurat
abhijit muhurtham meaning in telugu
abhijit muhurat today
abhijit muhurtham benefits
abhijit muhurtham is good or bad
abhijit muhurat time today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *